பல்கலை மாணவர்கள்மீது தாக்குதல்! இராஜாங்க அமைச்சரின் மகன் கைது!!

மருத்துவபீட மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோவின் மகன் (வயது – 23) கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாரிடம் அவர் சரணடைந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார் எனவும், அவர் பயன்படுத்தியதாக கூறப்படும் ஜீ வாகனமும் கைப்பற்றப்பட்டுள்ளது. அவர் இன்று அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தப்படவுள்ளார்.

மேற்படி சம்பவம் தொடர்பில் இதுவரை மொத்தமாக எழுவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பான விசாரணைகள் பலகோணங்களில் இடம்பெற்றுவருகின்றன.

Related Articles

Latest Articles