ஆளுங்கட்சி பக்கம் இருந்து எதிரணி பக்கம் தாவும் அரசியல்வாதிகளுக்கு ஐக்கிய மக்கள் சக்தி அரசியல் தஞ்சம் வழங்கிவருவது தொடர்பில் அக்கட்சியின் தவிசாளரான நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
அடுத்த தேர்தலை இலக்குவைத்து வரும் அனைவரையும் ஏற்றுக்கொள்வது ஏற்புடைய நடவடிக்கை அல்ல எனவும், இதனால் ஐக்கிய மக்கள் சக்திமீதும் மக்களுக்கு அதிருப்தி ஏற்படும் எனவும் பொன்சேகா சுட்டிக்காட்டியுள்ளார்.
” ஐக்கிய மக்கள் சக்திதான் தற்போது மாற்று சக்தியாகும். எனவே, எமது கட்சியில் இணைபவர்களின் கடந்தகாலம் பற்றி மக்கள் விழிப்பாகவே இருக்கின்றனர். எனவே, எமது கட்சி பக்கம் வருபவர்கள் தொடர்பில் விழிப்பாகவே இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் மக்கள் அரசியல் தலைவிதியை மாற்றி அமைப்பார்கள்.” – எனவும் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.
