மஞ்சள் கடவையில் வீதியைக் கடக்க முற்பட்ட பள்ளி மாணவியொரவர் உயிரிழந்த சம்பவம் கிளிநொச்சிப் பிரதேசத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிளிநொச்சி மத்திய கல்லூரிக்கு அருகில் கடந்த 15ஆம் திகதி காலை ஏ-9 வீதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் காயமடைந்த மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார்.
மஞ்சள் கடவையில் நடக்கும்போது அப்போது வேகமாக வந்த லொறி மஞ்சள் கடவைக்கு அருகில் நிறுத்தியது. அதற்கு பின்னால் வந்த லொறியும் நிறுத்தியது. எனினும், வேகமாக வந்த இ.போ.ச. பேருந்து வேகக் கட்டுப்பாட்டை இழந்து, லொறி மீது மோதியது. இதனால் மஞ்சள் கடவைக்கு அருகில் நிறுத்திய லொறி மாணவி மீது மோதியுள்ளது. இவை அனைத்தும் ஒரு சில நொடிகளில் நடந்துமுடிந்துள்ளன.
கிளிநொச்சி மத்திய கல்லூரியிலும் பயிலும் 17 வயது மாணவி ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.