‘பஸில் ஒதுங்கவில்லை – அவரின் கட்சி பணி தொடர்கிறது’

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பலப்படுத்துவதற்கான நடவடிக்கையில் தேசிய அமைப்பாளராக பஸில் ராஜபக்ச தீவிரமாக செயற்பட்டுவருகின்றார் – என்று நாடாளுமன்ற உறுப்பினர் இந்திக்க அநுருத்த தெரிவித்தார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஊடக சந்திப்பு இன்று முற்பகல் அக்கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றது.

இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

” பஸில் ராஜபக்ச செயற்பாட்டு அரசியலுக்கு வருவாரா என்பது தெரியாது. ஆனால் தேசிய அமைப்பாளராக அவர் கட்சியை வழிநடத்துவார். தற்போது கட்சி மறுசீரமைப்பு பணி இடம்பெற்றுவருகின்றது.” – எனவும் அவர் கூறினார்.

Related Articles

Latest Articles