2021 ஆம் ஆண்டு யூன் மாதம் 30 ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ள 2021 ஆம் ஆண்டின் நடுப்பகுதிக்கான நிதி நிலைமை தொடர்பான அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
2003 ஆம் ஆண்டு 03 ஆம் இலக்க அரச நிதி முகாமைத்துவ (பொறுப்பு) சட்டத்தின் 10 ஆம் உறுப்புரையின் ஏற்பாடுகளுக்கமைய ஆண்டின் நடுப்பகுதியில் நிதி நிலைமை தொடர்பான அறிக்கை நிதி அமைச்சரால், ஒவ்வொரு நிதியாண்டிலும் யூன் மாத இறுதியில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
இதற்கமையவே நிதி நிலைமை தொடர்பான அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக நிதி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
