மஹியங்கனை, ரிதிகொட்டாலியா பகுதியில் தனியார் பஸ்ஸில் இருந்து விழுந்து யுவதியொருவர் காயமடைந்துள்ளார். நேற்று மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
காயமடைந்த யுவதி மஹியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 18 வயது யுவதியொருவரே இவ்வாறு காயம் அடைந்துள்ளார்.
ரிதிகொட்டாலியா பாலத்திற்கு அருகில் பஸ்ஸை நிறுத்தி, பயணிகள் இறங்குவதற்கு முன்னர் மீண்டும் பஸ்ஸை சாரதி முன்னோக்கி எடுக்க முற்பட்டுள்ளார். அவ்வேளையில் பஸ்ஸில் இறங்க முற்பட்ட யுவதியே கீழே விழுந்துள்ளார். அவரின் காலில் எழும்பு முறியு ஏற்பட்டுள்ளது என தெரியவருகின்றது.
விபத்து தொடர்பில் பஸ் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.மேலதிக விசாரணைகளை மஹியங்கனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
ராமு தனராஜ்
