பஸ்ஸில் பயணித்துகொண்டிருந்த, மாணவியின் கன்னத்தில் அறைந்தார் எனக் கூறப்படும் ஆசிரியைக்கு எதிராக ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஹட்டன் கல்வி வலயத்துக்குட்பட்ட பாடசாலையொன்றில் சேவையாற்றும் ஆசிரியை ஒருவருக்கு எதிராகவே இவ்வாறு முறைப்பாடு முன்வைக்கப்பட்டுள்ளது.
டிக்கோயா பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ள இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
” ஹட்டனில் இருந்து டிக்கோயா போடைஸ் நோக்கி பயணித்த தனியார் பேருந்தில், பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பொதுமக்கள் என பலரும் சென்றுள்ளனர்.
அவ்வேளையில் மாணவியொருவரின் கால் , ஆசிரியை ஒருவரின் சேலைமீது பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ஆசிரியை பேருந்தில் வைத்து குறித்த மாணவியை அறைத்துள்ளார்.
தாக்குதலுக்கு இலக்கான பாடசாலை மாணவி , ஹட்டன் பொலிஸ் நிலையத்தில ஆசிரியைக்கு எதிராக முறைபாடு ஒன்றை பதிவு செய்துள்ளார். மாணவி டிக்கோயா கிளங்கள் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் விசாரணைக்காக குறித்த ஆசிரியை அழைக்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொகவந்தலாவ நிருபர். சதீஸ்
குறிப்பு – (சம்பவம் தொடர்பில் ஆசிரியர் தரப்பில் இருந்து கருத்துகள் முன்வைக்கப்பட்டால் அதனையும் வெளியிடுவதற்கு தயாராகவே இருக்கின்றோம். பொலிஸில் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டை அடிப்படையாகக்கொண்டு இச்செய்தி பிரசுரிக்கப்படுகின்றது.)










