“பஸ் கட்டணத்தை அதிகரிப்போம்” -பஸ் உரிமையாளர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை

டீசல் விலை அதிகரிக்கப்பட்டுள்ளபோதிலும் பஸ் கட்டணங்களை அதிகரிக்க வேண்டிய தேவை இல்லையென அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

எனினும், டீசல் விலை மீண்டும் அதிகரிக்கப்படுமாயின் மிகவும் உயர்ந்த வீதத்தில் பஸ் கட்டணங்களை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எனவே, மீண்டும் டீசல் விலையை அதிகரிக்க வேண்டாம் என பயணிகள், பஸ் உரிமையாளர்கள், பஸ் ஊழியர்கள் ஆகியோர் அரசாங்கத்திற்கு அழுத்தம் விடுக்க வேண்டும் என பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதேவேளை பெற்றோல் விலை குறைக்கப்பட்டிருந்தாலும் ஆட்டோ விலையில் மாற்றம் ஏற்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles