பஸ் கட்டணம் 35% அதிகரிப்பு

பஸ் போக்குவரத்து கட்டணத்தினை 35 வீதத்தினால் அதிகரிப்பதற்கு அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் குறித்த கட்டணம் அதிகரிக்கப்படவுள்ளது.

இதன்படி, 20 ரூபாவாக காணப்பட்ட ஆரம்ப கட்டணம் 27 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதேவேளை இ.போ.சா பஸ் கட்டணமும் 35 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது

Related Articles

Latest Articles