பஸ் கட்டணம் அதிகரிப்பை உறுதிப்படுத்தினார் அமைச்சர்!

எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதால் பஸ் கட்டணமும் கட்டாயம் அதிகரிக்கப்படும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம இன்று அறிவித்தார்.

தனியார் பஸ் உரிமையாளர் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் இன்று நடைபெற்ற சந்திப்பின் பின்பே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.

” எரிபொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளதால் பஸ் கட்டணமும் அதிகரிக்குமா என எல்லோரும் கேட்கின்றனர். இதற்கு ஆம் என்பதே பதில். கட்டணம் உயர்வை தடுக்க முடியாது. பஸ் உரிமையாளர்கள் மற்றும் பயணிகளின் கருத்துகளை உள்வாங்கு, தொகை நிர்ணயிக்கப்படும்.

தேசிய போக்குவரத்து ஆணைக்குழு நான்கு நாட்கள் அவகாசம் கோரியுள்ளது. அதன்பின்னர் முடிவெடுக்கப்படும்.” – என்றார்.

Related Articles

Latest Articles