பஸ் – லொறி மோதி விபத்து: ஒருவர் பலி – பலர் காயம்!

புத்தளம் – கொழும்பு வீதியில் மாதம்பை இரட்டைக்குளம் பகுதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளார். 15 இற்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

இபோச பஸ்ஸொன்றும், சீமெந்து ஏற்றிச் சென்ற லொறியும் நேருக்கு நேர் மோதியே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related Articles

Latest Articles