மண்சரிவு எச்சரிக்கை காரணமாக கொழும்பு – கண்டி வீதியில் தற்போது மூடப்பட்டுள்ள பஹல கடுகன்னாவ வீதியை மீண்டும் திறப்பது தொடர்பான தீர்மானம் நாளை (15) எடுக்கப்படவுள்ளது.
கேகாலை மாவட்ட செயலாளாா் எஸ் மஹிந்த வீரசூரிய இதனை தெரிவித்தாா்.
இதுதொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
சீரற்ற காலநிலை நாளையும் தொடருமாக இருந்தால் வீதி அபிவிருத்தி அதிகாரசபை, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றின் அதிகாரிகளுடன் இடம்பெறவுள்ள கலந்துரையாடலில் பின்னர் ஒரு வீதியைத் திறப்பதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பிரதேசத்தில் வாகனங்களை நிறுத்துவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதுடன் பயணிக்கு வாகனங்களுக்கிடையிலான இடைவெளி பேணப்படவேண்டும் எனவும் ஆலோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
கடந்த 10ஆம் திகதி மூடப்பட்ட இந்த வீதி தற்போது வரையில் தொடர்ச்சியாக நான்கு நாட்களாக மூடப்பட்டுள்ளது. தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அதிகாரிகள் இன்று ஆராய்ச்சிகள் நிறைவடைந்ததன் பின்னா் நீரை அகற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.