மகளிருக்கான இருபதுக்கு 20 உலகக்கிண்ண கிரிக்கட் தொடரில் இலங்கை அணி தமது முதலாவது போட்டியில் 31 ஒட்டங்களால் பாகிஸ்தானிடம் தோல்வியடைந்துள்ளது.
முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்த பாகிஸ்தான் மகளிர் கிரிக்கட் அணி ஆரம்பம் முதலே பெரும் தடுமாற்றத்தை எதிர்கொண்டது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 116 ஒட்டங்களை பெற்றது. அணித்தலைவி பாத்திமா சனா 30 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார்.
இலங்கை பந்துவீச்சில் சமரி அத்தபத்து, உதேஷிகா பிரபோதனி, சுகந்திகா குமாரி ஆகியோர் தலா மூன்று விக்கட்டுகளை வீழ்த்தினர்.
117 என்ற இலகுவான வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ஆரம்பம் முதலே பெரும் தடுமாற்றத்தை எதிர்கொண்டதுடன் 52 ஒட்டங்களுக்குள் 5 விக்கட்டுகளை இழந்து பெரும் தடுமாற்றததை எதிர் கொண்டது. இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கட்டுகளை இழந்து 85 ஓட்டங்களையே பெற்றது.
பாகிஸ்தான் அணித் தலைவி பாத்திமா சனா இரண்டு விக்கட்டுகளை வீழ்த்தியதுடன் துடுப்பாட்டத்தில் 30 ஓட்டங்களையும் குவித்ததால் ஆட்டநாயகி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.