பாகிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி பர்வேஸ் முஷாரப் காலமானார்

நீண்ட காலமாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி பர்வேஷ் முஷாரப் இன்று (05) தனது 79ஆவது வயதில் காலமானார்.

டுபாயில் உள்ள அமெரிக்க மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இவர் பாகிஸ்தானில் 1999ஆம் ஆண்டு இராணுவப் புரட்சி மூலம் நவாஷ் ஷெரிப் ஆட்சியைக் கலைத்து ஆட்சியைக் கைப்பற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles