பாகிஸ்தானின் வெள்ள நிவாரணப் பணிகளில் பாரிய ஊழல்! உலக நாடுகள் அதிருப்தி!

பாகிஸ்தானில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப் பணிகள் என்ற பேரில் மிக மோசமான ஊழல் நடந்துள்ளதாக குற்றஞ்சாட்டப்படுகிறது. மக்கள் பெருந்துயரில் இருக்கும் சந்தர்ப்பத்தில் நிவாரணப் பணிகளில் ஊழல் நடந்துள்ள இந்தச் சம்பவம் உலகளவில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட மாகாணங்களில் உள்ள மக்களுக்கு இந்த மனிதாபிமான நிவாரண உதவிகள் சென்றடையாமை குறித்து அமெரிக்காவும், ஐக்கிய நாடுகள் சபையும் தனது கவலையை வெளியிட்டுள்ளன.

மனிதாபிமான உதவிகள் வழங்க வேண்டிய விடயத்தில் ஊழல் குற்றச்சாட்டுக்கள் நடந்துள்ளதாக கூறப்படுவது குறித்து ”இதனை மிகவும் தீவிரமாக நாங்கள் எடுத்துக்கொண்டுள்ளோம்” என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ் அறிவித்துள்ளார். பாகிஸ்தானில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக வழங்கிய நிவாரண உதவிகளில் ஊழல் நடந்துள்ள விவகாரம் குறித்து உலக நாடுகள் கண்காணித்து வருகின்றன.

பாகிஸ்தானில் பெரும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு பல மாகாணங்கள் தத்தளத்துக் கொண்டிருந்தன. இடிபாடுகளில் மக்கள் சிக்கித் தவித்தனர். இந்த நிலையில், வெளிநாடுகள், அரசு சாரா நிறுவனங்கள், ஐ.நா பொதுச்செயலாளர் ஆகியவற்றின் உயர் அதிகாரிகள், பிரபலங்கள் மற்றும் இடர் மேலாண்மை நிபுணர்கள் பாகிஸ்தானுக்கான வெள்ள நிவாரண உதவிகளை வழங்க முன்வந்தனர்.

இந்த நிலையில், பாகிஸ்தான் மனிதாபினமான உதவிகளில் மீண்டும் மீண்டும் ஊழல் நடந்துள்ளமை குறித்து இவர்கள் தமது கவலையை வெளியிட்டுள்ளனர்.

2005 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தின் போது, ​​பாதிக்கப்பட்டவர்கள் துன்பத்தை மட்டுமே அனுபவித்துள்ளனர். பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மற்றும் பலுசிஸ்தான் ஆகிய பழங்குடியினப் பகுதிகளில் வசித்து வருகின்றனர். தற்போது ஊழல் அங்கு மோசமாகவுள்ளது. இந்த இரண்டு மாகாணங்களும் பாகிஸ்தான் வெள்ளத்தால் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் (TI) இன் பாகிஸ்தான் பிரிவு, தெற்காசிய நாட்டில் உள்ள பாகிஸ்தானை ஒரு வருடத்திற்குள் 24 புள்ளிகள் குறைத்துள்ளது. 161 நாடுகள் உள்ள பட்டியலில் 140ஆவது இடத்திற்குப் பாகிஸ்தான் பின்தள்ளப்பட்டுள்ளது.

வெள்ள நிவாரண பணிகளின் வெளிப்படைத்தன்மை குறித்து ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் தற்போது கேள்வியெழுப்பியுள்ளது.

‘பாகிஸ்தானில் ஏற்பட்ட பாரிய வெள்ளப்பெருக்கு அங்கு பேரழிவை ஏற்படுத்தியுள்ளது, இது பெரும் உயிர்கள் மற்றும் உள்கட்டமைப்பு இழப்புகளும் ஏற்பட்டுள்ளன. ஜூன் நடுப்பகுதியில் இருந்து சுமார் 1,700 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. 12,800 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். சிந்து (747), பலுசிஸ்தான் (325), மற்றும் கைபர் பக்துன்க்வா (307) ஆகிய இடங்களில் அதிக இறப்பு எண்ணிக்கைகள் பதிவாகியுள்ளன. இந்தத் தகவல்களை செப்டம்பர் 30 வரை, தேசிய இடர் முகாமைத்துவ ஆணையம் (NDMA) பதிவுசெய்துள்ளது.

அத்துடன், 2 மில்லியனுக்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்துள்ளன அல்லது அழிவடைந்துள்ளன. மேலும் சுமார் 7.9 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். இதில் சுமார் 598,000 பேர் இடைத்தங்கல் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர் என்று பாதிக்கப்பட்ட மாகாணங்களின் மாகாண இடர் முகாமைத்துவ அதிகாரிகளின் (PDMA) அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

25,100 பள்ளிகள் சேதமடைந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ள அதேவேளை, இடம்பெயர்ந்த மக்களை நடத்துவதற்கு 7,000க்கும் அதிகமான பாடசாலைகள் பயன்படுத்தப்படுவதாக மதிப்பீடுகள் சுட்டிக்காட்டுகின்றன.

இந்த மோசமான பாதிப்புக்கள் நிகழ்ந்த நெருக்கடியான காலகட்டத்தில் அனைத்து வழிகளிலும் பாகிஸ்தானுக்கு மனிதாபிமான உதவிகள் குவிந்தன. ஆனால், அந்த உதவிகளில் ஊழல் நடந்துள்ள செய்திகள் தற்போது உலக நாடுகள், அமைப்புக்கள் மத்தியில் முகம் சுழிக்க வைத்துள்ளது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles