‘பாகிஸ்தானிலுள்ள இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துக’

பாகிஸ்தானில் பணியாற்றும் இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு ஆளுங்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார, சபையில் இன்று கோரிக்கை விடுத்தார்.

வெளிவிவகார அமைச்சு மற்றும் தொழில் அமைச்சு என்பன இணைந்து இதற்கான வேலைத்திட்டத்தை முன்னெடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

அத்துடன், அடிப்படைவாதிகளால் இலங்கையர் ஒருவர் மிலேச்சத்தனமாக கொல்லப்பட்டுள்ள சம்பவத்தையும் அவர் கண்டித்தார்.

Related Articles

Latest Articles