‘பாகிஸ்தானில் இலங்கையர் கொலை’ – இலங்கை கடும் கண்டனம்!

பாகிஸ்தானில் இலங்கையர் ஒருவர் மிகவும் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்தை இலங்கை வன்மையாகக் கண்டித்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று விசேட அறிவிப்பொன்றை விடுத்த சபை முதல்வரும், அமைச்சருமான தினேஷ் குணவர்தன,

” பாகிஸ்தானில் உள்ள தொழிற்சாலையில் முகாமையாளராக பணிபுரிந்த பட்டதாரியான இலங்கையர் ஒருவர் (பிரியந்தகுமார) , அடிப்படைவாதிகளால் கொல்லப்பட்டுள்ளார். இதனை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

இச்சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தப்பட்டு, நீதியை வழங்குவதற்கு பாகிஸ்தான் பிரதமர் தலையிட்டுள்ளார். இதனை நாம் மதிக்கின்றோம்.” – என்றார்.

Related Articles

Latest Articles