பாகிஸ்தான் அணியின் மோசமான சாதனை

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல் இன்னிங்ஸில் 500க்கும் மேற்பட்ட ஓட்டங்களைக் குவித்தபோதிலும் இன்னிங்ஸ் தோல்வியடைந்த முதலாவது அணி என்ற பெயரை இன்று பாகிஸ்தான் பெற்றுக் கொண்டது.

இங்கிலாந்த, பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் முல்தானில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஓர் இன்னிங்ஸ் மற்றும் 47 ஓட்டங்களால் இங்கிலாந்து பாகிஸ்தானை வெற்றியீட்டியது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அதன் முதல் இன்னிங்சில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 556 ஓட்டங்களை குவித்ததுடன் அவ்வணியின் மூன்று துடுப்பாட்ட வீரர்களான ஷான் மசூத் ( 151 ஓட்டங்கள்) , சல்மான் அகா (104 ஓட்டங்கள்), அப்துல்லா ஷபிக் 102 ஓட்டங்களை குவித்து தமது அணியை பலமான நிலைக்கு கொண்டு சென்றனர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணியினர் பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களை மிக இலாவகமாக கையாண்டதுடன் இங்கிலாந்து வீரர் ஹரி ப்றூக் குவித்த முச்சதம் (317 ஓட்டங்கள்) இரட்டைச் சதம் குவித்த ஜோ ரூட் (262 ஓட்டங்கள்) ஆகியோரின் உதவியுடன் ஏழு விக்கட் இழப்பிற்கு 823 ஓட்டங்களை பெற்று இன்னிங்சை இடைநிறுத்தியது.

அழுத்த்தின் மத்தியில் தமது இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்த பாகிஸ்தான் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 260 ஓட்டங்களை பெற்றது.

சுரேஷ் குமார்

Related Articles

Latest Articles