பாகிஸ்தானில் இலங்கையர் ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை வன்மையாக கண்டிப்பதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானின் சியால்கோட் பகுதியில் உள்ள தொழிற்சாலையில் முகாமையாளராக பணிபுரியும் பிரியந்த குமார என்ற இலங்கையர் கொலை செய்யப்பட்டு எரியூட்டியமை கண்டனத்துக்குரியது என இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அத்தோடு இச்சம்பவம் தொடர்பில் பாகிஸ்தான் அரசு உடனடியாக பொறுப்பு கூற வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
மேலும் காட்டுமிராண்டித்தனமான செயலை வன்மையாகக் கண்டிப்பதோடு குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டு நீதி நிலைநாட்டப்பட நாம் அனைவரும் ஒன்றிணையவேண்டு என இராஜாங்க அமைச்சர் கேட்டுக்கொண்டர்.