பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கிடையிலான 2ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகின்றது.
லாகூரில் பாகிஸ்தான் நேரப்படி மாலை 5 மணிக்கு போட்டி ஆரம்பமாகும்.
பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.
கடந்த சனிக்கிழமை நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில், ஆஸ்திரேலிய அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது.
அந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆஸ்திரேலியா 200 ஓட்டங்களுக்குள் சுருண்டது.
இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் பாகிஸ்தான் 1-0 என முன்னிலையில் உள்ளது.
இன்றைய போட்டியில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் பாகிஸ்தான் அணியும், முதல் வெற்றியைப் பதிவு செய்து தொடரை சமன் செய்யும் போராட்டத்துடன் ஆஸ்திரேலிய அணியும் களம் காண்கின்றன.










