பாகிஸ்தானில் துறைமுகத்துக்கு இறக்குமதி செய்யப்பட்ட சரக்குகளுக்கு clearance அனுமதி வழங்கப்படாததால் பருப்பு விலை உயர்ந்து வருகிறது.
வங்கிகள் உரிய ஆவணங்களை அனுமதிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், இந்நிலை ஏற்பட்டுள்ளதாக பாகிஸ்தானைச் சேர்ந்த டான் நாளிதழ் தெரிவித்துள்ளது.
டாலர் பற்றாக்குறை மற்றும் இறக்குமதி ஆவணங்களை வழங்க வங்கிகள் பின்னடிப்பதன் காரணமாக, கடந்த இரண்டு மாதங்களாக துறைமுகத்தில் 6,000க்கும் மேற்பட்ட பருப்பு வகை கன்டெய்னர்கள் அகற்றப்படாமல் இருப்பதைக் கண்டித்து ஸ்டேட் வங்கியின் தலைமை அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தப்பட்டதாக கராச்சி மொத்த விற்பனை வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் ரவூப் இப்ராஹிம் கூறியுள்ளார்.
2023 ஜனவரி 1-ம் திகதி ரூ.180 ஆக இருந்த உளுந்தின் மொத்த விலை கிலோவுக்கு ரூ.205 ஆகவும், டிசம்பர் 1, 2022 அன்று ரூ.170 ஆகவும் உயர்ந்துள்ளதாக ஒரு சரக்கு இறக்குமதி/ஏற்றுமதியாளரான பைசல் அனிஸ் மஜீத், குறிப்பிட்டதாக Dawn செய்தி நிறுவனம் அறிக்கையிட்டுள்ளது.
டிசம்பரில் ரூ.200 ஆக இருந்த மசூர் பருப்பு விலை ரூ.205ல் இருந்து ரூ.225ஐ எட்டியது. கௌபி மற்றும் பயறு விலை முறையே ரூ.315ல் இருந்து ரூ.335 ஆகவும், ரூ.260 ஆகவும், ரூ.225 ஆகவும் உயர்ந்தது. டிச, 1ல், கௌபி மற்றும் பயறு ரூ.288 மற்றும் ரூ.200க்கு விற்கப்பட்டது.
மசூர், பயறு, கௌபி, உளுத்தம்பருப்பு ஆகியவற்றின் விலை சில்லறை சந்தையில் ரூ.270-280, ரூ.250-300, ரூ.380-400, ரூ.230-260 என்றவாறு உயர்ந்துள்ளது. துறைமுகத்தில் இருந்து பருப்பு கொள்கலன்கள் அகற்றப்படாததால், சில்லறை விலை மேலும் உயரக்கூடும்.
ஜனவரி 1, 2023 முதல் வங்கிகள் எந்தவொரு இறக்குமதி ஆவணங்களையும் ஏற்றுக்கொள்வதை நிறுத்திவிட்டதாக மஜீத் கூறினார், அத்துடன் தற்போது வந்துள்ள சரக்குகளுக்கான கொடுப்பனவுகளையும் நிறுத்தியுள்ளதாக டான் செய்தித்தாள் தெரிவித்துள்ளது.
ஆண்டுதோறும், பாகிஸ்தான் சுமார் 1.5 மில்லியன் டன் இறக்குமதி செய்யப்படும் பருப்பு வகைகளை நுகர்கிறது. தேங்கி நிற்கும் கொள்கலன்கள் தினசரி கப்பல் நிறுவன தடுப்புக் கட்டணங்களைச் செலுத்துவதாக மஜீத் கூறினார். இந்த கூடுதல் செலவு இறுதி நுகர்வோரையே சென்றடையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
சமீபத்தில், கோதுமை மாவின் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாடு காரணமாக, வணிகர்கள் மற்றும் வர்த்தகர்கள் உட்பட ஏராளமான மக்கள் பாகிஸ்தானில் போராட்டங்களை நடத்தியதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த போராட்டங்களில் விவசாயிகள் மற்றும் மாணவர்களும் அங்கம் வகித்தனர்.
வர்த்தகர்களின் தலைவர்களான ஹபீப் கான், இப்திகார் கான் மற்றும் PQM தலைவர் வாலி முஹம்மது கான் ஆகியோர், கோதுமை மாவின் விலை ஒரு மாதத்திற்குள் 1000 ரூபாய்க்கு மேல் உயர்த்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.
விலையில் சாதனை அதிகரிப்பைத் தொடர்ந்து, குறைந்த வருமானம் பெறும் பிரிவினர் பாகிஸ்தானில் ஒரு பை மாவு வாங்குவது இப்போது கடினமாக உள்ளது, மேலும் மக்கள் உதவிக்காக அரசாங்கத்தை நாடுகின்றனர் என்று தி நியூஸ் இன்டர்நேஷனல் செய்தித்தாள் தெரிவித்துள்ளது.