பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி கராச்சியில் இன்று ஆரம்பமாகின்றது.
கராச்சி, பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் கராச்சியில் உள்ள நேஷனல் ஸ்டேடியத்தில் நடந்த முதலாவது டெஸ்ட் ‘டிரா’வில் முடிந்தது.
இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி அதே கராச்சியில் இன்று ஆரம்பமாகின்றது.
