பாகிஸ்தானின் டோரு பகுதியில் வசிப்பவர்கள், தங்கள் பகுதியில் திட்டமிடப்படாத மற்றும் நீடித்த மின்வெட்டுக்கு எதிராக உள்ளூர் கிரிட் நிலையத்தை முற்றுகையிடப்போவதாக மிரட்டல் விடுத்ததாக செய்தி வெளியாகியுள்ளது.
நாளுக்கு நாள் மின்வெட்டு அதிகரித்து வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். மேலும் மாவட்டத்தில் பல பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.
சமூக சேவகரும் யூனியன் கவுன்சில் உறுப்பினருமான ஜஹாங்கிர் கான் டோரு கூறுகையில், அப்பகுதியில் அதிகப்படியான மின்வெட்டு காரணமாக மாணவர்கள், நோயாளிகள், குழந்தைகள், முதியோர்கள் பிரச்சினைகளை எதிர்கொள்வதாக தெரிவிக்கப்படுகிறது.
மின்கட்டணம் செலுத்தியும், இப்பகுதிகளுக்கு முறையாக மின்வினியோகம் செய்யப்படவில்லை என அவர் வேதனை தெரிவித்தார்.
இதற்கிடையில், அப்பகுதியைச் சேர்ந்த மற்றொரு குடியிருப்பாளரான இஹ்திஷாம் கூறுகையில், பெஷாவர் மின்சார விநியோக நிறுவனம் (PESCO) மீட்டர் ரீடிங் செய்யாமல் உயர்த்தப்பட்ட பில்களை அவர்களுக்கு அனுப்பியதாக குற்றம் சாட்டினார்.
நீண்ட காலமாக மின்வெட்டு ஏற்பட்டுள்ளதை பெஸ்கோ கவனிக்கத் தவறியதாக அப்பகுதியைச் சேர்ந்த சிலர் குற்றம் சாட்டினர். அப்பகுதிக்கு மின்சாரம் வழங்கப்படாவிட்டால் கிரிட் நிலையத்தை முற்றுகையிடப்போவதாக அவர்கள் மிரட்டியதாக செய்தி வெளியாகியுள்ளது.










