” நாட்டிலுள்ள சில பாடசாலைகளில் வசதிகள் சேவைக் கட்டணமாக 3 ஆயிரம் ரூபா அறிவிடப்படுகின்றது. தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் இவ்வாறான கட்டணங்கள் அறிவிடப்படக்கூடாது. இது உடன் நிறுத்தப்பட வேண்டும்.” – என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தினார்.
நாடாளுமன்றத்தில் இன்று இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர், குருணாகலை மாவட்டத்தில் இக்கட்டணத்தை அறவிட்டுள்ள பாடசாலை பெயரையும் வெளியிட்டார்.
” நாட்டில் மீண்டும் வரிசை யுகம் உருவாகியுள்ளது. பொருளாதார ரீதியில் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சில பாடசாலைகளில் வசதிகள் சேவைக் கட்டணம் அறிவிடப்படுகின்றது. இதனை கல்வி அமைச்சர் உடன் தடுத்து நிறுத்த வேண்டும். இது தொடர்பில் விசாரணை நடத்தி உடன் சுற்று நிருபம் ஒன்றை வெளியிடுங்கள்.” – என்றார் எதிர்கட்சித் தலைவர் சஜித்.
இது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வி அமைச்சர் இதற்கு பதிலளித்தார்.