அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை விடுமுறை குறித்த அறிவிப்பை கல்வி அமைச்சு இன்று வெளியிட்டுள்ளது.
இதற்கமைய தமிழ் மற்றும் சிங்கள மொழி மூல பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை விடுமுறை நாளை (27) வழங்கப்படுகின்றது. மூன்றாம் தவணைக்காக பாடசாலைகள் நவம்பர் முதலாம் திகதி மீண்டும் திறக்கப்படும்.
அதேவேளை, புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் இன்று ஆரம்பமாகின. எதிர்வரும் 31ஆம் திகதி வரை மதிப்பீட்டு பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.










