பாடசாலைகள் எப்போது திறக்கப்படும்? ஞாயிறன்று இறுதி முடிவு

நாட்டிலுள்ள பாடசாலைகளை மீள எப்போது திறப்பது என்பது தொடர்பில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (02.04.2021) உறுதியான முடிவெடுக்கப்படும் என்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” மாணவர்களுக்கு தங்குதடையின்றி கல்வி வழங்கப்படவேண்டும் என்பதே அரசின் நிலைப்பாடாகும். அதேபோல மாணவர்களின் சுகாதார பாதுகாப்புக்கும் முன்னுரிமை வழங்கப்படும். அந்தவகையில்தான் 30 ஆம் திகதிவரை நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகள், முன்பள்ளிகள் மற்றும் பிரிவனாக்களில் கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ளாதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சுகாதார நிலைமை நாளாந்தம் மீளாய்வு செய்யப்படுகின்றது. நாட்டில் மாகாண கல்விப்பணிப்பாளர்கள் 9 பேர் இருக்கின்றனர். 100 வலய கல்விப்பணிப்பாளர்கள் இருக்கின்றனர். அவர்களிடமும் கருத்துகள் பெறப்படுகின்றன. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உட்பட சுகாதார தரப்பினரிடமும் ஆலோசனைகள் பெறப்படும்.

இதன்படி மே 2 ஆம் திகதி அதாவது ஞாயிற்றுக்கிழமை, மே 3 ஆம் திகதி ஆரம்பமாகும் வாரத்தில் பாடசாலைகளை திறக்கமுடியுமா என்பது தொடர்பில் உறுதியான முடிவு எடுக்கப்படும்.”  – என்றார்.

Related Articles

Latest Articles