பாடசாலையில் பரிசோதனை : 101 பேருக்கு கொரோனா தொற்று இல்லை…!
மினுவாங்கொடை ஆடை தொழிற்சாலையில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றுடைய பெண்ணின் மகளின் பாடசாலையில் மாணவர்கள் மற்றும் உத்தியோகத்தர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பீ சீ ஆர் பரிசோதனையில் 101 பேருக்கு கொரோனா தொற்று இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
திவுலப்பிட்டிய ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களில் 706 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
இந்த கொவிட் கொத்தில் முதல் முதலாக அடையாளம் காணப்பட்ட பெண்ணின் மகளுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதனையடுத்து குறித்த 16 வயது மகள் கல்வி பயின்றுவந்த பாடசாலையில் உள்ள சக மாணவர்கள், ஊழியர்கள் உள்ளிட்டவர்களிடம் பீ.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
எனினும், 101 பேரிடம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் இவர்களில் யாருக்கும் கொரோனா தொற்று இல்லை எனவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
#srilanka #lka #COVID19SL