அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் எதிர்வரும் பெப்ரவரி 5 ஆம் திகதி ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
வினாத்தாள் கசிந்ததால், உயர்தர விவசாய விஞ்ஞான வினாத்தாளின் பகுதி 1 மற்றும் 2 ஆகிய இரண்டையும் மீள நடத்துவதற்கு பரீட்சை திணைக்களம் தீர்மானித்துள்ளது. குறித்த பரீட்சை பெப்ரவரி முதலாம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்காரணமாகவே பெப்ரவரி முதலாம் திகதி ஆரம்பமாகிவிருந்த மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கை, பெப்ரவரி 5 வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, வினாத்தாள் கசிவு தொடர்பில் ஆசிரியர் ஒருவரும், பாடசாலை உதவியாளர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
