ராஜஸ்தானின் ஜலாவர் மாவட்டத்தில் உள்ள அரசு இடைநிலைப் பள்ளி ஒன்றின் மேற்கூரை இடிந்து விழுந்ததில், 6 மாணவர்கள் உயிரிழந்தனர். 32 பேர் காயமடைந்தனர்.
ஜலாவர் மாவட்டம், தங்கிபுரா காவல் எல்லைக்கு உட்பட்ட பிப்லோட் கிராமத்தில் இயங்கி வரும் இடைநிலை அரசு பள்ளியில் 6 மற்றும் 7-ம் வகுப்பு மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இன்று வழக்கம்போல் பள்ளி கூடி, காலையில் இறைவணக்கம் பாடிக்கொண்டிருக்கும்போது பள்ளி கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது.
இதில், இடிபாடுகளில் மாணவர்கள் பலர் சிக்கி உள்ளனர். ஆசிரியர்கள் மற்றும் கிராம மக்கள் இணைந்து மேற்கொண்ட மீட்புப் பணி மூலம் பல மாணவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
எனினும் இந்த விபத்தில் 6 மாணவர்கள் உயிரியழந்துவிட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்துக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் ஆழந்த வேதனையைத் தெரிவித்துள்ளனர்.