தினியாவல நெலுவ பெலவத்த வீதியில் 09 ஆம் தூண் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஆறு வயது சிறுவன் ஒருவர் பலியாகியுள்ளார்.
பெலவத்தையில் இருந்து நெலுவ நோக்கி பயணித்த கொழுந்து லொறியொன்று வேக கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த வீடொன்றின்மீது விழுந்துள்ளது.
இதன்போது, குறித்த வீட்டின் வாசலில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவன்மீது லொறி விழுந்துள்ளது.
படுகாயமடைந்த சிறுவன் மீகஹதென்ன வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். எனினும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
லொறியின் சாரதி மற்றும் உதவியாளரும் காயமடைந்து எல்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சிறுவன் சர்வதேச பாடசாலையொன்றில் தரம் ஒன்றில் நேற்று இணையவிருந்தார். எனினும், துரதிஷ்டவசமாக விபத்தில் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
