பாட்டியின் மாத்திரைகளை உட்கொண்ட பேத்தி உயிரிழப்பு: நுவரெலியாவில் சோகம்!

நுவரெலியா ஸ்கிராப் தோட்டத்தில் பாட்டியின் அரவணைப்பில் வாழ்ந்து வந்த 15 வயதுடைய பாடசாலை மாணவியொருவர், இரத்த அழுத்தத்தை குறைக்கும் மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக உட்கொண்டதால் உயிரிழந்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

கடந்த (25) ஆம் திகதி பாட்டி வீட்டில் இல்லாத நேரத்தில் பாட்டி பயன்படுத்தி வந்த இரத்த அழுத்தத்தை குறைக்கும் மாத்திரைகளை அதிக அளவில் உட்கொண்டு மயக்கம் உற்ற நிலையில் அயலவர்களின் உதவியுடன் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி (27) உயிரிழந்துள்ளார்.

குறித்த சிறுமியின் தாய் சிறு வயதில் உயிரிழந்த நிலையில் தந்தை வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு நானுஓயா பிரதேசத்தில் தனியாக வாழ்ந்து வந்துள்ளார். எனினும் குறித்த சிறுமி உயிரிழந்த சம்பவம் தந்தைக்கு தெரியாத நிலையில் நுவரெலியா பொலிஸாரின் உதவியுடன் தந்தையை தேடி பிரேத பரிசோதனையின் பின் சடலம் (29) தந்தையிடம் ஒப்படைக்கப்படுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

மேலும் குறித்த சிறுமிஇரத்த அழுத்தத்தை குறைக்கும் மாத்திரைகளை தானாகவே அதிக அளவில் உட்கொண்டாரா ? அல்லது வேறு யாரேனும் அவருக்குத் தெரியாமலேயே அதிக அளவில் மாத்திரைகளை கொடுத்தனரா ? என்ற பல கோணத்தில் மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles