சுட்டுக்கொலை செய்யப்பட்ட வெலிகம பிரதேச சபைத் தவிசாளருக்கு பாதாள குழுவுடன் தொடர்புள்ளதெனில் அவர் உயிருடன் இருக்கும்போது ஏன் கைது செய்யப்படவில்லை என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார கேள்வி எழுப்பியுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் விசேட கூட்டமொன்று நேற்று முன்தினம் இடம்பெற்றது.
இக்கூட்டத்தின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட ரஞ்சித் மத்தும பண்டார மேலும் கூறியவை வருமாறு,
” நாட்டு மக்கள் மற்றும் அரசியல்வாதிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. இந்த ஆட்சியின்கீழ் முதலாவது அரசியல் படுகொலை இடம்பெற்றுள்ளது .
எல்லா சம்பவங்களையும் பாதாள குழுக்கள்மீது திணிப்பதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றது. ஜனநாயக வழியில் மக்கள் வாக்குகளுடன் அவர் (வெலிகம பிரதேச சபை தலைவர்) சபைக்கு வந்தவர். அவரின் படுகொலைக்கு அரசாங்கம் பொறுப்புக்கூற வேண்டும்.
அவருக்கு பாதாள குழுவுடன் தொடர்புள்ளதெனில் இதுவரையில் அவர் ஏன் கைது செய்யப்படவில்லை?”- என்றார்.










