பாதீடு நெருங்கும்வேளை ஜனாதிபதிக்கு ‘தலையிடி’ கொடுக்கிறது மொட்டு கட்சி!

உடன் அமுல்படுத்துமாறு கோரி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் நான்கு விசேட கோரிக்கைகளை ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி முன்வைத்துள்ளது.

கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசத்தின் கையொப்பத்துடன் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் இக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி சமுர்த்தி நிவாரணத்தை தொடர்ந்து வழங்குதல், உர மானியத்தை தொடர்ந்தும் வழங்குதல்,
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்படும் நிதியை மீள வழங்குதல், அரச நிறுவன மறுசீரமைப்பின்போது வேலை இழப்பு இடம்பெறக்கூடாது என்பதே அந்த நான்கு கோரிக்கைகளாகும்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி நான்கு விசேட கோரிக்கைகளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் முன்வைத்துள்ளது.

கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசத்தின் கையொப்பத்துடன் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி தொடர்ந்து சமுர்த்தி நிவாரணம் வழங்குதல், உர மானியம் தொடர்ந்து வழங்குதல், அரச நிறுவனங்களின் மறுசீரமைப்பின் போது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்படும் நிதியை இழக்கக் கூடாது என்பது நான்கு கோரிக்கைகளாகும்.

நாட்டில் வறுமையை ஒழிப்பதற்கான சிறந்த பொறிமுறை சமுர்த்தி இயக்கம் எனவும், எனவே இயக்கத்தின் பெயரை மாற்றுவது பொருத்தமானதல்ல எனவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளது.

Related Articles

Latest Articles