பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்து 3 வயது குழந்தை பலி – கரந்தெனிய பகுதியில் சோகம்

வீட்டுக்கு முன்னாலிருந்த பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்து ஆண் குழந்தையொன்று பலியான பெருந்துயர் சம்பவம், கரந்தெனிய,மாகொட பகுதியில் இடம்பெற்றுள்ளது.

மினோத் என்ற 3 வயது குழந்தையே இவ்வாறு பலியாகியுள்ளது.

வீட்டு வளாகத்தில் நேற்று மாலை குறித்த சிறுவன் விளையாடிக்கொண்டிருந்துள்ளார். திடீரென காணாமல்போன நிலையில், அவரை உறவினர்கள் தேடியுள்ளனர்.

இந்நிலையிலையே வீட்டுக்கு முன்னால் பாதுகாப்பற்ற வகையில் இருந்த கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles