தலவாக்கலை நகரிலுள்ள வர்த்தக நிலையத்தின் 2ஆவது மாடியிலிருந்து 50 வயது மதிக்கத்தக்க ஆணொருவர் கிழே விழுந்து படுகாயமடைந்துள்ளார்.
அவரின் தலை பகுதியே பலமாக அடிபட்டுள்ளது. சிகிச்சைகளுக்காக அவர் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவ் வர்த்தக நிலையத்தில் இரண்டாவது மாடியில் பாதுகாப்பு வேலி அமைக்கப்படாமையால் இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளது என நகரவாசிகள் தெரிவிக்கின்றனர்.
வர்த்தக நிலைய உரிமையாளர், வர்த்தக நிலையத்தை மூடிவிட்டு தப்பிக்க முயன்ற போது அவ்விடத்தை, உள்ள பொது மக்கள் முற்றுகையிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
டி.சந்ரு செ.திவாகரன்