ரி-20 உலக்கிண்ண தொடரில் நேற்று இடம்பெற்ற போட்டிகளில் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் வெற்றிபெற்றன.
இந்நிலையில் நேற்றைய இரு போட்டிகள் தொடர்பில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசனின் முகநூல் பதிவு வருமாறு,
“Good Cricket என்பது இதான். மறக்க முடியாத கிரிகட் நாள். நேற்று பின்மாலை இரவு தொலைகாட்சியில், அரசியல் கிரிகட் விளையாடிட்டு, ஓடோடி வந்து அசல் கிரிகட் பார்த்தேன்.
ஒன்று, கிரிகட் “உலக” யுத்தம். அடுத்தது, கிரிகட் “கண்ட” யுத்தம். உலக யுத்தத்தில், சமீப வரலாற்றில் இந்தியா பெறாத தோல்வியை மேளத்தாளதத்துடன் வழங்கி பாக் கொடி நாட்டியது. வர்ணாஜால கலாப ஆனால், சுலப வெற்றி.
சமீபத்தில்தான் கிரிகட்-பிரதமர் இம்ரான், இந்திய கிரிகட் எதேச்சதிகாரம் என்று போட்டு விளாசினார்.அதற்கமைய பாக் வீரர்களும் போட்டு விளாஆஆசி விட்டார்கள்.
அப்புறம், நம்மாளுகள், போட்டி போன போக்கை, மாற்றிப்போட்டு, வென்றார்கள். அதான் வெற்றி.
கிரிகட் அதிகமாக விளையாடும் நாடுகளை கொண்ட தெற்கு ஆசிய கண்ட வெற்றி.
ரிஸ்வான், அசாம், அப்ரிடி இவர்களை பாக்கிஸ்ஸுடன் சேர்ந்து நாமும் கொண்டாடுறோம்.
அதேபோல், சரித், பானுக ஆகிய நம்ம ஹீரோஸை நாம் கொண்டாடுறோம். இதில் பானுக “ராஜபக்ச”வை, தமக்கு தூரத்து சொந்தம்னு சொல்லி, மாளிகைக்கு அழைத்து, “மெனிகே…” பாட்டு பாடிக்காட்ட, இவரை கிரிகட் ஆடிக்காட்ட, சொல்லாமல் இருக்க ஆண்டவனை வேண்டுகிறேன்.
