வவுனியாவில் பாப்பரசர் நினைவாகத் துக்க தினம் அனுஷ்டிக்கப்பட்டது.
கத்தோலிக்கத் திருச்சபையின் பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் அடிகளாரின் மறைவையடுத்து இன்று நாடு பூராகவும் துக்க தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது.
அந்தவகையில், வவுனியா மாவட்ட செயலகத்தில் துக்க தினம் அனுஷ்டிக்கப்பட்டது.
இதன்போது மாவட்ட அரச அதிபர் பீ.ஏ.சரத்சந்திரனால் தேசியக் கொடி அரைக் கம்பத்தில் பறக்க விடப்பட்டதுடன், பாப்பரசர் நினைவாக மெழுகுவர்த்தி தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதில் கத்தோலிக்க மதகுருமார், மேலதிக மாவட்ட அரச அதிபர், மாவட்ட செயலக உத்தியோகத்ர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.