பாப்பரசர் தலைமையிலான குழு வத்திக்கான் பயணம்

கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையில், 60 பேர்கொண்ட குழு, பரிசுத்த பாப்பரசர் பிரான்ஸிசைச் சந்திப்பதற்காக, வத்திக்கான் நோக்கிப் பயணமாகியுள்ளது.

இன்று காலை வத்திக்கான் நோக்கிப் பயணமான இந்தக் குழுவில், கொழும்பு ஆயர் இல்லத்தின் தொடர்பாடல் பணிப்பாளர் அருட்தந்தை ஜூட் கிரிசாந்த பெர்னாண்டோவும் அடங்குகின்றார்.

அத்துடன், உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட 30 பேரும் இந்தக் குழுவில் அடங்குகின்றனர்.

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களைச் சந்திக்க வேண்டும் எனப் பாப்பரசர் விடுத்த அழைப்புக்கு அமைய, குறித்த குழுவினர் வத்திக்கான் பயணமாகியுள்ளனர்.

Related Articles

Latest Articles