பாம்பு தீண்டி பெண் தோட்ட தொழிலாளி பலி! பசறையில் சோகம்!!

பசறை, கோணக்கலை பகுதியில் கொழுந்து கொய்துகொண்டிருக்கையில் பாம்பு தீண்டலுக்கு உள்ளான பெண் தொழிலாளியொருவர் இன்று உயிரிழந்துள்ளார்.

56 வயதுடைய 3 பிள்ளைகளின் தாயொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கோணக்கலை கீழ் பிரிவு VP 16 ஆம் இலக்கமுடைய தேயிலை மலையில் கடந்த 16 ஆம் திகதி கொழுந்து கொய்துகொண்டிருக்கையிலேயே அவர் பாம்பு கடிக்கு உள்ளாகியுள்ளார்.

இதனையடுத்து அவர் பசறை மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைகளுக்காக பதுளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். அங்கு அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

ராமு தனராஜா

Related Articles

Latest Articles