இந்தியாவின் நிதி உதவியுடன் முன்னெடுக்கப்படவுள்ள 10 ஆயிரம் வீட்டு திட்டத்தில் முதற் கட்டமாக மலையகத்தில் 45 தோட்டப்பகுதிகளில் நிர்மாணிக்கப்படவுள்ள 1,300 வீடுகளுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று நடைபெற்றது.
பிரதான நிகழ்வு அமைச்சர் ஜீவன் தொண்டமானின் ஒருங்கிணைப்பின்கீழ் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இந்திய தூதுவரின் பங்கேற்புடன் நடைபெற்றது.
இதற்கு சமாந்தரமாக 45 தோட்டங்களிலும் அடிக்கல் நாட்டும் விழா இடம்பெற்றது.
நுவரெலியா மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட தோட்டப்பகுதிகளில் இடம்பெற்ற பாhத் லங்கா தனி வீட்டு திட்டத்திற்கான இன்றைய அடிக்கல் நாட்டும் நிகழ்வுகளில் நுவரெலியா மாவட்டத்தில் பீற்று தோட்ட பகுதியான ஸ்கிராப் தோட்டம், வலப்பனை மஹாவுவா தோட்டம், அக்கரப்பத்தனை, பூண்;டுலோயா பேஹரம் தோட்டம்,வெஸ்ட்வாடோ தோட்டம் ஆகியவற்றில் அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வுகளில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மக்கள் பிரதநிதிகள்,தோட்ட அதிகாரிகள்,தேசிய வீடமைப்பு அதிகார சபை அதிகாரிகள்,தோட்ட பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது தனி வீட்டுக்கான அடிக்கல் நாட்டப்பட்ட தோட்டங்களில் வீடு கட்ட தெரிவு செய்யப்பட்ட இடங்களில் மத அனுஸ்டானங்கள்,விசேட பூசைகள் மற்றும் வேலைத்திட்ட பதாதை திரைநீக்கமும் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
ஆ.ரமேஷ்










