சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில், நாடாளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழுக் கூட்டம் இன்று பிற்பகல் 2 மணிக்கு நடைபெறவுள்ளது.
நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் தலைவர்களும், பிரதிநிதிகளும் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளனர்.
செப்டம்பர் மாதத்துக்கான முதல் வார நாடாளுமன்ற அமர்வை நடத்துவது தொடர்பில் ஆராயப்பட்டு முடிவெடுக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றம் எதிர்வரும் 06 ஆம் திகதி கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், கொரோனா நெருக்கடி நிலைமையால் ஒன்று அல்லது இரு நாட்களுக்கே இம்முறையும் சபை கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. அதற்கேற்ற வகையிலேயே இன்று தீர்மானம் எடுக்கப்படலாம்.