பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரரை பாராளுமன்றம் அனுப்புவதற்கு எங்கள் மக்கள் சக்தி கட்சி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
அத்துடன், தலைமறைவாகியுள்ள பொதுச்செயலாளரை நீக்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எங்கள் மக்கள் சக்தி கட்சியின் சம்மேளனம் நேற்று முன்தினம் நடைபெற்றது.
இதன்போது கட்சியின் அனுமதியின்றி தேசியப்பட்டியல் எம்.பி. பதவிக்கு தனது பெயரை தேர்தல் ஆணைக்குழுவுக்கு பரிந்துரைசெய்துகொண்ட பொதுச்செயலாளர் வெதனிகம விமலதிஸ்ஸ தேரரை கட்சியை விட்டு நீக்குவதற்கும், ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன், கட்சியின் தலைவரை நாடாளுமன்றம் அனுப்பி, அடுத்த நாளே அவர் இராஜினாமா செய்த பின்னர் அந்த இடத்துக்கு ஞானசார தேரரை நியமிப்பதற்கான யோசனைக்கும் சம்மேளனம் அனுமதி வழங்கியுள்ளது.
பொதுச்செயலாளர் நீக்கப்பட்ட விடயம் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவுக்கு அறிவிக்கப்படவுள்ளது.