பாரிய மரம் முறிந்து விழுந்து கொழுந்து மடுவம் சேதம்

கடும் காற்று காரணமாக பசறை டெமேரியா பகுதியில் இன்று காலை பாரிய மரம் ஒன்று வேருடன் சாய்ந்து வீதியில் விழுந்துள்ளது.

இதனால் அப்பகுதியில் இருந்த கொழுந்து மடுவம் மற்றும் சிகை அலங்கார நிலையம் என்பன பாதிக்கப்பட்டுள்ளன.

மேலும் பசறை பகுதியில் இருந்து டெமேரியா,மஹத்தன்ன, மீரியபெத்த,தம்பேவெல ஆகிய பகுதிகளுக்கு செல்லும் வீதியில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.குறித்த மரத்தினை அகற்றுவதற்குரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருகின்றது.

ராமு தனராஜா

Related Articles

Latest Articles