ஐ.நா. பொது சபையில் பாலஸ்தீனத்துக்கு நிரந்தர உறுப்புரிமை வழங்குவது குறித்து ஐ.நா. பாதுகாப்பு சபை சாதகமாக பரிசீலிக்க வேண்டும் எனக்கோரும் தீர்மானத்துக்கு 143 நாடுகள் ஆதரவாக வாக்களித்துள்ளன.
ஐ.நா. பொதுச்சபையில் பார்வையாளர் அந்தஸ்த்து மட்டுமே பாலஸ்தீனத்துக்கு உள்ளது. இந்நிலையிலேயே வாக்குரிமையுடன் நிரந்தர உறுப்புரிமை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனக்கோரி யோசனை முன்வைக்கப்பட்டது.
இந்த யோசனைமீது நேற்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
ஆஸ்திரேலியா உட்பட 143 நாடுகள் ஆதரவாக வாக்களித்துள்ளன.
அமெரிக்கா, இஸ்ரேல் உட்பட 7 நாடுகள் எதிராக வாக்களித்தன. 25 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.