”பாலஸ்தீன நாடு இனி இருக்காது. இந்த இடம் எங்களுக்கு சொந்தமானது” என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்தார்.
பாலஸ்தீனர்கள் வசிக்கும் காசாவில் இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என பல உலக நாடுகள் வலியுறுத்தி வருகிறது. ஆனால் அமெரிக்காவின் ஆதரவுடன் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியதாவது: பாலஸ்தீன நாடு இனி இருக்காது. இந்த இடம் எங்களுக்கு சொந்தமானது. பாலஸ்தீன நாடு இருக்காது என்ற எங்கள் வாக்குறுதியை நாங்கள் நிறைவேற்ற போகிறோம்.
நாங்கள் எங்கள் பாரம்பரியம், எங்கள் நிலம் மற்றும் எங்கள் பாதுகாப்பை உறுதி செய்வோம். இவ்வாறு இஸ்ரேல் பிரதமர் பேசியது பரபரப்பை கிளப்பி உள்ளது.
இஸ்ரேல் பிரதமரின் பேச்சுக்கு ஐ.நா., பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ் கண்டனம் தெரிவித்து உள்ளார்.