பால்மா, சமையல் எரிவாயு, கோதுமை மாவின் விலைகள் இன்று உயர்வு! அமைச்சரவை ஒப்புதல்!!

பால்மா, சமையல் எரிவாயு, கோதுமை மா மற்றும் சீமெந்து ஆகியவற்றின் விலைகளை அதிகரிப்பதற்கு வாழ்க்கைச்செலவு தொடர்பான அமைச்சரவை உப  குழு பரிந்துரை முன்வைத்துள்ள நிலையில், இது தொடர்பில் இன்று இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளது.

இன்று நடைபெறும் அமைச்சரவைக்கூட்டத்திலேயே தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.

வாழ்க்கைச்செலவு தொடர்பான அமைச்சரவை உப குழுக்கூட்டம் பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் கடந்த வெள்ளிக்கிழமை  நடைபெற்றது.  இதன்போதே விலை அதிகரிப்புக்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. இதற்கு நுகர்வோர் அதிகார சபையும் அனுமதி வழங்கியது.

இதன்படி ஒரு கிலோ பால்மாவின் விலை 200 ரூபாவாலும், சமையல் எரிவாயுவின் விலை 550 ரூபாவாலும், ஒரு கிலோ கோதுமை மாவின் விலை 10 ரூபாவாலும்,  சீமெந்து மூடையொன்றின் விலை 50 ரூபாவாலும் அதிகரிப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles