பால்மா விலை மீண்டும் எகிறும் அறிகுறி!

இறக்குமதி செய்யப்படும் பால் மா ஒரு கிலோகிராமின் விலையை 300 ரூபாவினால் அதிகரிப்பதற்கு பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தயாராகி வருகின்றது.

400 கிராம் பக்கெட் பால் மாவின் விலையை 120 ரூபாவாக அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

உலக சந்தையில் ஒரு தொன் பால் மாவின் விலை 5,500 அமெரிக்க டொலர் வரை அதிகரித்துள்ளதாக பால் மா இறக்குமதியாளர் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த பின்புலத்தில், பால் மாவின் விலையை அதிகரிப்பதை தவிர்த்து வேறு மாற்றுவழி இல்லையென அவர்கள் கூறுகின்றனர்.

இது தொடர்பில் நிதி அமைச்சு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சுக்கு அறிவித்துள்ளதாக பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ணவிடம் வினவியபோது, பால் மாவிற்கான நிர்ணய விலை நீக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

Related Articles

Latest Articles