பின்லாந்தும் சுவீடனும் விரைவாக நேட்டோ கூட்டணியில் சேரும் என்று நேட்டோவின் தலைவர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பர்க் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அவ்விரு நாடுகளும் நேட்டோவில் சேர்வதைத் துருக்கி எதிர்க்கிறது.
நேட்டோவில் உள்ள 30 நாடுகளும் ஏகமனதாக ஏற்றுக்கொண்டால் தான் புதிய நாடுகள் அதில் சேரமுடியும்.
பின்லாந்தும் ஸ்வீடனும் குர்தியத் தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் வழங்கிவருவதாகத் துருக்கி குற்றஞ்சாட்டுகிறது.
பின்லாந்தும் ஸ்வீடனும் நேட்டோவில் சேர்வதை அமெரிக்கா முழுமையாக ஆதரிக்கிறது. அவ்விரு நாட்டுத் தலைவர்களையும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் சத்தித்துத் தமது ஆதரவை உறுதிப்படுத்தினார்.
பின்லாந்துக்கும் ஸ்வீடனுக்கும் நேட்டோவில் சேர்வதற்கான எல்லாத் தகுதியும் இருப்பதாக பைடன் கூறினார்.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பை அடுத்தே இந்த இரு நாடுகளும் நேட்டோவில் இணைவதற்கு விண்ணப்பித்துள்ளன. எனினும் நேட்டோவை அச்சுறுத்தலாக கருதும் ரஷ்யா, அந்த கூட்டணி விரிவுபடுத்தப்படுவதும் விளைவுகளை ஏற்படுத்தும் என்று எச்சரித்துள்ளது.