ஜனாதிபதி செயலாளர் பதவியிலிருந்து பிபீ ஜயசுந்தர நீக்கப்படும் பட்சத்தில் அவருக்கு நிதி அமைச்சின் ஆலோசகர் பதவி வழங்கப்படலாம் என அரச தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி செயலாளர் பதவியிலிருந்து பிபீ ஜயசுந்தரவை நீக்குமாறு அமைச்சர் சமல் ராஜபக்ச திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
இந்நிலையில் இது தொடர்பில் ஆராய்வதற்காக சில நாட்களுக்கு முன்னர் அமைச்சர் சமல் ராஜபக்சவின் வீட்டில் ராஜபக்சக்கள் ஒன்றுகூடியுள்ளனர்.
இதன்போது, ஜனாதிபதி ஆலோசகராக பிபீயை நியமிக்குமாறு பிரதமரமே தனக்கு ஆலோசனை வழங்கினார் எனவும், இதனால் இது விடயத்தில் தனக்கு முடிவெடுக்க முடியாதெனவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய சூழ்நிலையில் பிபீ ஜயசுந்தரவை நீக்குவது ஏற்புடைய நடவடிக்கை அல்ல, அமைச்சரவை செயலாளர்களை மாற்றும்போது அதனை செய்யலாம், அவ்வாறு செய்தாலும் அவருக்கு நிதி அமைச்சின் ஆலோசகர் பதவி வழங்கப்படும் என பஸில் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, பீபீ ஜயசுந்தர வழங்கிய இராஜினாமா கடிதத்தை ஏற்க ஜனாதிபதி மறுப்பு தெரிவித்திருந்தாலும், செயலாளர்கள் மாற்றத்தின்போது அவர் மாற்றப்படவுள்ளாரென அறியமுடிகின்றது.
