” நெருக்கடியான சூழ்நிலையில், மக்களை காக்க பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்வந்தார். அதனை நாம் பாராட்டுகின்றோம். அவருக்கு ஆதரவு வழங்கினோம். இந்த சவாலை ஏற்பதற்கு வேலுகுமார் எம்.பி. பிரதமர் ஆகி இருந்தால்கூட, அவருக்கும் நாம் ஆதரவு வழங்கியிருப்போம்.”
இவ்வாறு இ.தொ.காவின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய ஜீவன் தொண்டமான் மேலும் கூறியவை வருமாறு,
” பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எம்மிடம் ஆதரவு கோரினார். சர்வக்கட்சி அரசு அமைந்தால் அது பற்றி பரீசலிக்கலாம். நாம் அமைச்சு பதவியை ஏற்றால்கூட அது மக்களுக்கான அமைச்சாகவே இருக்கும்.
பிரதமரின் நேற்றையை உரையை வரவேற்கின்றோம். இனிப்பான உண்மையைவிடவும், கசப்பான பொய் மேலானது. நெருக்கடியான சூழ்நிலையில் இந்த சவாலை யார் ஏற்றிருந்தாலும் நாம் ஆதரவு வழங்கியிருப்போம். ” – என்றும் ஜீவன் குறிப்பிட்டார்.